“பொறுப்பு என்பது நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய நம்பிக்கை” – அதை காப்பாற்றுவது ஒவ்வொரு ஊழியரின் கடமை

கிராஞ்சியில் வனப்பகுதியை சட்டவிரோதமாக அகற்றியதில் தொடர்புடைய இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதாவது, JTC கார்ப்பரேஷன் அதிகாரி மற்றும் அவரது அப்போதைய மேற்பார்வையாளருக்கும் இன்று புதன்கிழமை (நவம்பர் 9) நீதிமன்றம் அபராதம் விதித்தது.

சிங்கப்பூர் ஆயுதப்படை வாகனம், டாக்ஸி மோதி விபத்து – இருக்கையில் சிக்கி உயிருக்கு போராடிய ஓட்டுநர்

47 வயதான முன்னாள் JTC துணை இயக்குனர் சோங் புய் சிஹ் மற்றும் அவருக்கு கீழ் பணிபுரிந்த 44 வயதான நியோ ஜெக் லின்னுக்கு தலா S$30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இருவரும் அவர்கள் மீது சாட்டப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த வாரம் ஒப்புக்கொண்டனர். நியோ JTCயில் மூத்த திட்ட மேலாளராக இருந்தார், தற்போது அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிராஞ்சி குளோஸ் மற்றும் கிராஞ்சி சாலையில் உள்ள வேளாண்-உணவு கண்டுபிடிப்பு பூங்காவின் வளர்ச்சி நிலத்துக்கு இவர்கள் இருவரும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் – இறுதியில் விபத்தில் இறந்தது தன் மகன் என்று அறிந்து கதறிய சோகம்