KTM ரயில் சேவை தொடக்கம் – பேருந்தை விட ரயில் சேவை வசதியாக இருப்பதாக கூறும் பயணிகள்

Pic: File/TODAY

KTM ரயில் சேவை ஜோஹோர் பாருவுக்கும் உட்லண்ட்சுக்கும் இடையில் நேற்று தொடங்கியது.இந்தச் சேவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் தொற்று காரணமாக மார்ச் 2020 முதல் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

மலேசியாவின் போக்குவரத்து துறை அமைச்சர் வீ கா சியாங் இதனை நேற்று அறிவித்தார்.தினசரி 31 சேவைகள் நடக்கும்.ஜோஹோர் பாருவிலிருந்து உட்லண்ட்சுக்கு 18 ரயில் சேவைகளும்,மீதமுள்ள 13 சேவைகள் உட்லண்ட்சிலிருந்து ஜோஹோர் பாருவுக்கும் இயக்கப் படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ரயில் சேவை மூலம் தினசரி 7000 பயணிகள் ,பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகஅவர் கூறினார்.இருந்தாலும் முதல் வாரத்தில் ஒவ்வொரு ரயிலிலும் 240 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.அடுத்த வாரத்தில் இருந்து ரயில்கள் 320 பயணிகளை ஏற்றிச் செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.

30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் புறப்படும்.ஜோஹோரிலிருந்து உட்லண்ட்சுக்கு செல்ல ஒருவருக்கு கட்டணம் 5 ரிங்கிட் ஆகும்.உட்லண்ட்சிலிருந்து செல்ல $5 கட்டணம் வசூலிக்கப்படும்

மலேசிய அமைச்சர் ஜோஹோர் பாரு சென்ட்ரலில் நேற்று KTM ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.இதற்கிடையில் KTM ரயில் சேவை குறித்து கருத்து தெரிவித்த ஜோஹோர் முதல்வர் கடற்பாலத்தில் கூட்டம் குறையும் என்று கூறினார்.

இந்தத் தொடக்கம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி என்று கூறிய அவர் இந்த சேவையை மக்கள் அதிகம் நாடுவதாக தெரிவித்தார்.முதல் மாதத்தில் மட்டும் இந்த ரயிலில் 70000-க்கும் மேற்பட்ட பயணச்சீட்டுகள் விற்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேருந்தை விட ரயில் சேவை வேகமாகவும் வசதியாகவும் இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.மேலும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதை பயணிகள் வரவேற்றனர்.