கோலாலம்பூரில் கார் பட்டறையில் பயங்கர தீ விபத்து: 90 சதவீத பட்டறை தீயில் எரிந்து நாசம்

hazwanhfiz/Twitter & redzuanNewsMPB/Twitter

கோலாலம்பூரில் உள்ள துணை மாவட்டமான சிகாம்புட்டில் உள்ள கார் பட்டறையில் செவ்வாய்க்கிழமை (நவ. 23) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

வெட்டப்பட்ட கார்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகன உதிரிபாகங்களைக் கையாளும் கார் பட்டறையான சுசுகா ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்று பெரிட்டா ஹரியான் மலேசியா கூறியுள்ளது.

நிறுவனத்தை ஏமாற்ற போலியாக நடித்த வெளிநாட்டு ஊழியர் விடுவிப்பு

இந்த பட்டறை துடா-உலு கெலாங் எக்ஸ்பிரஸ்வே (DUKE) அருகே செலாயாங்கை நோக்கிய வழியில் அமைந்துள்ளது.

ஹரியான் மெட்ரோ தகவல்படி, 90 சதவீத கார் பட்டறை தீயில் எரிந்து நாசமானதாக கூறியுள்ளது.

கடந்த நவம்பர் 23 அன்று மாலை 5:50 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் படி, எட்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 83 மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை’- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!