தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அதிரடி ஆஃபரை அறிவித்துள்ள பிரபல உணவகம்!

Photo: OK CHICKEN RICE

மே 1- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, சிங்கப்பூரில் உள்ள பிரபல உணவகமான ‘OK CHICKEN RICE’ அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வெளியானது ‘பொன்னியின் செல்வன் 2’- திரையரங்குகளின் பட்டியல்!

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ‘OK CHICKEN RICE’ உணவகம், “தொழிலாளர் தினத்தை சக சிங்கப்பூரர்களுடன் கொண்டாடும் வகையில், மே 1- ஆம் தேதி அன்று மட்டும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை ரோஸ்ட் சிக்கன் ரைஸையோ (Roast Chicken Rice) (அல்லது) ரோஸ்ட் சிக்கன் கறி நூடுல்ஸையோ (Roast Chicken Curry Noodles) (அல்லது) ஸ்டீம் சிக்கன் ரைஸையோ (Steam Chicken Rice) (அல்லது) ஸ்டீம் சிக்கன் கறி நூடுல்ஸையோ (Steam Chicken Curry Noodles) வெறும் 3 வெள்ளியை மட்டுமே செலுத்தி உணவருந்தலாம்.

மே 3- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

எனினும், உணவகத்தில் சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். எனவே, உணவுகளை வீண் செய்யாமல் வேண்டும் என்கிற அளவை மட்டும் பெற்றுக் கொண்டு சாப்பிட வேண்டும். அதேபோல்,சிங்கப்பூரில் ‘OK CHICKEN RICE’ உணவகத்துக்கு சொந்தமான 8 கிளைகளிலும் இச்சலுகைகள் கிடைக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.