“ஊழியர்கள் பற்றாக்குறை, வேலையை விரைந்து முடிக்க அவசரம்” – வேலையிட மரணங்களுக்கு முக்கிய காரணம்; நிபுணர்கள்

construction workers in singapore
AFP/Roslan Rahman

COVID-19 தொற்றுநோய் ஏற்படுத்திய இடையூறுகள் காரணமாக சிங்கப்பூரில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

அதோடு மட்டுமல்லாம், வேலையை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்ற காலக்கெடு ஆகியவை சமீபத்திய வேலையிட விபத்துக்கள் மற்றும் இறப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

“செக்ஸ், செக்ஸ், செக்ஸ்” என்று சிறுமியை துன்புறுத்திய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை!

சிங்கப்பூரில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 25 வேலையிட மரணங்கள் ஏற்பட்டுள்ளன, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் எடுத்துக்கொண்டால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த இறப்புகளின் எண்ணிக்கை 2021 முதல் பாதியில் பதிவு செய்யப்பட்ட 23 ஐ விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் லீ, “பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் நடைமுறை கட்டமைப்புகள் குறைந்துள்ளது போல் தெரிகிறது” என்றார்.

இதுவரை வேலையிட மரணங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்றும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பேஸ்புக் பதிவில் அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில், “நாம் இழந்த நிலையை, சரி செய்ய வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டவரை “நாய்”..”உன் நாட்டுக்கு போ” என்று இன ரீதியாக தாக்கிய ஆடவர் இறந்த நிலையில் கண்டெடுப்பு