எல்லோருக்கும் இது சாத்தியமானதா! -வேலை அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் நபர்களின் வெளிநாட்டு வாகனங்களுக்கு சிங்கப்பூருக்குள் அனுமதி இல்லை

Photo: Land Transport Authority Official Facebook Page

சிங்கப்பூரில் வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடியாது.சிங்கப்பூரில் மளிகைக்கடையில் பணி புரியும் மலேசியரான நரேன் என்ற நபர் ,நீண்டநேரம் வேலை செய்யும் தம்மைப்போன்ற தொழிலாளர்கள் அசதியோடு வீடு திரும்ப வேண்டியிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வாகனங்கள் குறைந்தபட்சம் 6 மணிநேரம் மட்டுமே சிங்கப்பூருக்குள் இருக்க முடியும். குறிப்பிட்ட மணியளவிற்கு பின் சிங்கப்பூரை விட்டு வெளியேறி ஆக வேண்டும்.கடந்த ஜூலை 1-ஆம் தேதி இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.

கடந்த சில வாரங்களாக மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலிருக்கும் நில சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து சிங்கப்பூருக்குள் வரும் வாகனங்களைக் குறைக்க நிலப்போக்குவரத்து ஆணையம் இந்த விதிகளை அமல்படுத்தியது.

சிங்கப்பூருக்குள் மோட்டார் வாகனங்களை இயக்கும் மலேசிய ஓட்டுனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.எனவே பொது மக்கள் நலன் கருதி விபத்துகளைக் குறைக்கவும் வாகனங்களைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மக்கள் நம்புகின்றனர்.

புதிய விதிமுறையால் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்திருக்கிறது.ஆனால் இது எல்லாருக்கும் சாத்தியமானது அல்ல.சிங்கப்பூரில் வாகனம் வாங்க முயன்றாலும் விலை அதிகமாக உள்ளது.இந்த விதிமுறையை மீறுவோருக்கு 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் $1000 வரை அபராதமும் விதிக்கப்படும்.