சிங்கப்பூர் இறக்குமதி செய்தால் இத்தனை லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கலாமா! – ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனங்கள்

File Photo

சிங்கப்பூர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.லாவோசிலிருந்து தாய்லாந்து,மலேசியா வழியாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இறக்குமதி செய்யும்.இவ்வாறு சிங்கப்பூர் இறக்குமதி செய்வது இதுவே முதல் முறையாகும்.

சிங்கப்பூருக்கு நூறு மெகாவாட் வரையிலான மின்சாரம் இறக்குமதி செய்யப்படும்.ஆசியன் நாடுகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தில் தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்,மலேசியா,தாய்லாந்து,லாவோஸ் ஆகிய நான்கு நாடுகளை இணைக்கும் திட்டத்தின் வழியாக செயல்படுத்தப்பட உள்ளது.

நூறு மெகாவாட் மின்சாரம் என்பது 2020-இல் சிங்கப்பூரின் மின்சாரத் தேவையில் 1.5 விழுக்காடாகும்.இதன் மூலம் வருடத்திற்கு ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும்.

இந்த எரிசக்தி ஒப்பந்தமானது கடந்த செப்டம்பர் மாதத்தில் சிங்கப்பூரின் Keppel Electric ,லாவோஸின் மின்சார விநியோக நிறுவனமான Electricite to Laosஆகியவற்றுக்கு இடையே போடப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் எரிசக்தியை வாங்கும் ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன.