இனி மின்சாரத் தேவையை நினைத்து கவலை வேண்டாம் – வரவிருக்கும் புதிய திட்டம் என்ன தெரியுமா ?

singapore

லாவோஸின் நீர்மின்சாரத்தை தாய்லாந்து மற்றும் மலேசியா வழியாக சிங்கப்பூருக்கு 100 மெகாவாட் வரை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது என எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) தெரிவித்துள்ளது. இதன் மூலம் தென்கிழக்கு ஆசியாவில் ஒரு வரலாற்று மைல்கல்லை உருவாக்கியுள்ளது சிங்கப்பூர். இந்த இறக்குமதி செய்யப்பட்ட 100 மெகாவாட் மின்சாரம் ஒரு வருடத்திற்கு 144,000 நான்கு அறைகள் கொண்ட HDB அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கும் திறன் உடையது.

 

சிங்கப்பூருக்கு வரும் மின்சாரம், LTMS-PIP என்னும் திட்டம் மூலம் ஏற்கனவே இருக்கும் இணைப்புகள் வழியாக லாவோஸிலிருந்து வருகிறது. மேலும் லாவோஸிலிருந்து இறக்குமதி செய்யும் மின்சாரத்தால் சிங்கப்பூரின் மின்சார விலையில் பாதிப்பு ஏற்படாது.

 

LTMS-PIP என்பது Asean Power Grid-APGஇன் பரந்த பார்வையை கண்டறிய வந்த திட்டம் ஆகும். இது ஏற்கனவே உள்ள  மின்சார இணைப்புகள் மூலம் மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி ஆகும். இது 2035 ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரில் நான்கு ஜிகாவாட்கள் (GW) அளவிலான மின்சாரம் வரை இறக்குமதி செய்வதற்கு வழி வகுக்கும் சோதனைகளில் ஒன்றாகும். இத்திட்டம் ஜூன் 23, 2022 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இயங்கும்.