கடந்த டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானங்களில் 6,00,000 பேர் பயணம்!

Photo: Singapore Airlines Official Facebook Page

கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் விமானங்களில் (Scoot) 6,00,000 பேர் பயணம் மேற்கொண்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் (Singapore Airlines Group) அறிவித்துள்ளது.

“ஜிஎஸ்டி உயர்வு அடுத்தாண்டு ஜன.1- ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரலாம்”- பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் நேற்று (17/01/2022) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “கடந்த டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் விமானங்களில் 6,00,000 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2021- ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்த எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இரு மடங்காகவும், கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்த எண்ணிக்கையை விட ஏழு மடங்கு அதிகமாகவும் உள்ளது.

கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயண திட்டத்தில் (Vaccinated Travel Lane- ‘VTL’) பாங்காக் உட்பட எட்டு நகரங்கள் இணைந்திருக்கிறது.

தைப்பூசம்- ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் Non- VTL நாடுகளுக்கு வழங்கப்படும் விமானச் சேவைகளையும் சேர்த்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் சுமார் 85 இடங்களுக்கு விமான சேவைகளை வழங்கியுள்ளது.” இவ்வாறு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டோருக்கான சிறப்பு பயணம் திட்டம் (VTL) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் விமானம் மூலம் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. இது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் நிறுவனங்கள், விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்த நாடுகளுக்கு அதிகளவில் விமானங்களை இயக்கின.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து 852 கிராம் தங்கம் பறிமுதல்!

எனினும், ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 23- ஆம் தேதி முதல் ஜனவரி 20- ஆம் தேதி வரை, சிங்கப்பூருக்குள் நுழையும் ‘VTL’ விமானங்களுக்கான புதிய டிக்கெட் விற்பனையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.