சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சரைச் சந்தித்த லாட்வியா துணை பிரதமர்!

Photo: Ministry Of Defence In Singapore

நான்கு நாள் அறிமுகப் பயணமாக கடந்த டிசம்பர் 2- ஆம் தேதி அன்று லாட்வியா நாட்டின் துணை பிரதமரும், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சருமான டாக்டர் ஆர்ட்டிஸ் பப்ரிக்ஸ் (Latvian Deputy Prime Minister and Minister for Defence Dr Artis Pabriks) சிங்கப்பூருக்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, நேற்று (03/12/2021) காலை சிங்கப்பூரின் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னை (Minister for Defence Dr Ng Eng Hen) அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

லாட்வியா துணை பிரதமர், அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுடன் சந்திப்பு!

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவைக் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர். இறுதியில் சிங்கப்பூர் மற்றும் லாட்வியா நாடுகளிடையே பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் இணைந்து செயல்படுவது, பாதுகாப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வது ஆகியவைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இருநாட்டு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

இது குறித்து சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “டாக்டர் இங் எங் ஹென் மற்றும் டாக்டர் பப்ரிக்ஸ் சந்திப்பின் போது, சிங்கப்பூருக்கும், லாட்வியாவிற்கும் இடையே இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர். பாதுகாப்பு கொள்கையில் பரிமாற்றங்கள் போன்ற பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இரண்டு அமைச்சர்கள் கையெழுத்திட்டதன் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மனைவி தவறான நிலையில் இருக்கும் அந்தரங்கப் படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஆடவருக்கு சிறை

டாக்டர் பாப்ரிக்ஸின் வருகை சிங்கப்பூருக்கும், லாட்வியாவுக்கும் இடையிலான உறவுகளையும், வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் எடுத்துக்காட்டுகிறது”. இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு லாட்வியா துணை பிரதமர், வரும் டிசம்பர்- 5 ஆம் தேதி அன்று லாட்வியா நாட்டிற்கு மீண்டும் திரும்புகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.