‘கூகுளும் சிங்கப்பூரும்’ – சிங்கப்பூர் தொழில்நுட்ப வளர்ச்சி காண்கிறதா?

lawrence wong
கூகுள் நிறுவனத்தின் 3-வது கணினித் தகவல் மையம் சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.கூகுள் நிறுவனம் சுமார் 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் செயல்படுகிறது.
தற்போது,கூகுள் நிறுவனம் சிங்கப்பூர் மீதான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தி வருகிறது.இணையப் பாதுகாப்புப் பற்றி 50,000 பெற்றோர்,பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம் போன்றவற்றை கூகுள் தொடங்கியுள்ளது.

கூகுள் போன்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுவதால் சிங்கப்பூரில் தொழில்நுட்பம் வலுவடையும்.
குறிப்பாக தெர்சிகள்,புத்தாக்கம்,சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் அந்த வளம் உறுதி பெறும் என்று நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைப் பிரதமர் வோங் தெரிவித்தார்.

மின்னிலக்கப் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருவதால்,அதிலிருந்து கிடைக்ககூடிய வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்ளக்கூடிய நிலையில் சிங்கப்பூர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் நிலை மேம்படுவதோடு இலக்கு நிறைவேறும் என்றார் .