G20 கருத்தரங்கின் முக்கிய நிகழ்வுகளை பாப் இசைப் பின்னனியில் “ட்ரென்டிங்”கோட சொல்லியிருக்கார் !

lawrence wong pop

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஜி20, 2022 இந்தோனேசிய பிரசிடென்சியில் கலந்து கொள்தற்காக தற்போது பாலியில் உள்ளார். நிதி அமைச்சராகவும் இருக்கும் வோங், மற்ற தலைவர்களுடன் கலந்துரையாடல்களிலும் பங்கேற்பார் என்றும் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

ஜூலை 14 அன்று அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார், அதில் வரி மற்றும் மேம்பாடு தொடர்பான G20 கருத்தரங்கில் அமைச்சர்கள் பேசியதில் இந்திய நிதியமைச்சருடன் ஒரு நல்ல சந்திப்பு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின்  தலைவருடன் MOU (புரிந்துணர்வு ஒப்பந்தம்) கையெழுத்தானது ஆகியவை அந்த வீடியோவில் இருந்தன.

 

இருப்பினும், சிங்கப்பூர் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது எதுவென்றால், வோங் எப்படி K-Pop பாடலான “POP” பாடலை தனது வீடியோவிற்கு பின்னணி இசையாகப் பயன்படுத்தினார் என்பதும் அதற்கு ஏற்றவாறு கை அசைவுகளை செய்ததும் தான். POP பாடல் சமீபத்தில் K-Pop பெண்கள் குழுவான TWICE’s இன் Im Nayeon ஆல் வெளியிடப்பட்டது. இதனுடன், அவர் #PopPopPopChallenge ஐயும் தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.