“ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக பயன்படுத்திய முகக்கவசம்” – 2 வாடிக்கையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Stomp

ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக பயன்படுத்திய முகக்கவசம் பார்சலில் வந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒருவர் அல்ல இரண்டு லாசாடா வாடிக்கையாளர்கள் தங்கள் பார்சல்களைத் திறந்து பார்த்தபோது பயன்படுத்திய முகக்கவசம் உள்ளே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ATMல் பணம் எடுக்க நேரம் ஆனதற்கு கடும் சண்டை; இரத்தம் வழிந்தோட சண்டையிட்டு கொண்டவர்களை தூக்கிய போலீஸ் – வீடியோ

Shopee வாடிக்கையாளர் ஒருவர் $39.90க்கு ஏணிபடியை ஆர்டர் செய்துள்ளார், ஆனால் அதற்கு பதிலாக அவருக்கு அட்டைப் பெட்டி வந்துள்ளது. இருப்பினும் அந்த விற்பனையாளர் Shopee-யால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை படித்த மேற்கண்ட அவர்கள் தங்கள் அனுபவங்களை ஸ்டாம்ப் தளத்துடன் பகிர்ந்து கொண்டனர்.

Lazada வழியாக $22.18க்கு இறகு பந்தை ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு பயன்படுத்திய முகக்கவசம் மட்டுமே வந்ததாக ஸ்டாம்பிடம் அவர் கூறினார்.

“ஷாங்காயில் சமீபத்திய கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக தொழிற்சாலை மூடப்பட்டதால், விற்பனையாளரால் இறகு பந்தை அனுப்ப முடியவில்லை” என அந்த வாடிக்கையாளர் கூறியுள்ளார்.

“ஆர்டரை ரத்து செய்ய விற்பனையாளர்கள் எனக்கு செய்தி அனுப்பினர், ஆனால் என்னால் அவர்களை உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை, எனவே அவர்கள் பயன்படுத்திய PPE முகக்கவசத்தை அனுப்பினர்” என அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற குளறுபடி குறித்து லாசாடா வாடிக்கையாளர்கள் புகாரளிப்பது இது முதல் முறை அல்ல.

“தனி ஆளாக சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல முடியாது, குரூப்பா தான் ஆள் வேணும்”… தந்திரமாக ஏமாற்றிய ஆடவர் – ஏமாந்துபோன அப்பாவி இளைஞர்கள்