ஆசையாய் iPhone 13 Pro Maxஐ ஆர்டர் செய்த சிங்கப்பூர் பெண் – வெற்றுப் பெட்டியைப் பெற்ற சோகம் !

lazada iphone

சிங்கப்பூரில் 30 வயது பெண் ஒருவர் செப். 25 அன்று Lazada வழியாக iPhone 13 Pro Max ஐ ஆர்டர் செய்து அதற்கு S$1,624.49 செலுத்திய நிலையில், ஒரு வெற்றுப் பெட்டி மட்டுமே கிடைத்துள்ளது. ஃபோன் மற்றும் அதன் USB-C சார்ஜரை காணவில்லை.

 

இது குறித்து செப். 29 அன்று ஃபேஸ்புக்கில் என்ன நடந்தது என்று புகார் செய்துள்ளார் அந்த பெண். Lazadaவின் கூற்றுப்படி, iPhone 13 Pro Max இருக்க வேண்டிய பார்சல் செப்டம்பர் 27 அன்று அவரது வீட்டு வாசலிலேயே டெலிவரி செய்யப்பட்டது. ஆனால் அந்த பெண் பேக்கேஜிங்கைத் திறந்தபோது, ​​உள்ளே ஆப்பிள் போன் எதுவும் இல்லாத ஒரு வெற்றுப் பெட்டியைக் கண்டு திகைத்துள்ளார்.

 

மேலும் அவரது முகநூல் பதிவில் தனது பார்சலின் ரேப்பர் சேதப்படுத்தப்பட்டு உள்ளே கிழிந்திருப்பதைக் காட்டும் படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் டெலிவரி செய்யப்பட்ட நாளிலேயே போலீசில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். மேலும் செப். 28 அன்று, அத்தம்பதியினர் சிங்போஸ்ட் மற்றும் லாசாடா ஆகிய இடங்களுக்குச் சென்று புகார் அளித்துள்ளனர். சிங்போஸ்ட் மற்றும் லாசாடா இந்த விஷயத்தை ஆராய்ந்து வருவதாகவும் அவருக்குத் தெரிவித்துள்ளனர்.

 

இதற்கு மாற்றாக மற்றொரு iPhone 13 Pro Max அனுப்பப்படும் என்று அவருக்கும் அவரது மனைவிக்கும் லாசாடாவைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் அக்டோபர் 3 ஆம் தேதி நண்பகலில் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அதே நாள் மாலையில், Lazadaவின் பிரதிநிதி ஒருவர் புதிய iPhone 13 Pro Max உடன் தம்பதியினரைப் பார்வையிட்டு மற்றும் அவர்களிடம் நிறுவனத்தின் சார்பாக மன்னிப்புகளையும் தெரிவித்துள்ளார்.