சிங்கப்பூரின் செல்லக்குட்டி சீனாவிற்குச் செல்கிறதா ? – ஒப்பந்தத்தின் படி ஒப்படைக்கப்படும் குட்டிப் பாண்டா

baby panda birthday singapore lele

குறும்புத்தனத்திற்கு பேர் போன விலங்கு பாண்டா கரடிகள்.இவற்றின் குறும்புத்தனத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கத்தான் செய்கிறார்கள்.சிங்கப்பூரின் ரிவர் வாண்டர்ஸ் சுற்றுலாத் தளத்தில் உள்ள இரண்டு ராட்சத பாண்டா கரடிகளை 2027-ஆம் ஆண்டு வரை மட்டுமே பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

அந்த பாண்டா கரடிகள் இன்னும் 5 ஆண்டுகள் இங்கிருப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவுடன் கையெழுத்திட்டுள்ளது.இரண்டு பாண்டாக்களும் கடந்த 2012-ஆம் ஆண்டு சீனாவிலிருந்து சிங்கபூருக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த இரண்டு பாண்டாக்களின் விடாமுயற்சியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி லீ லீ என்னும் குட்டி பிறந்தது.இரண்டு பாண்டாகாளுக்கும் முன்கூட்டியே நேற்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.ஜியா ஜியாவின் பிறந்தநாள் செப்டம்பர் 3.காய் காயின் பிறந்த நாள் இம்மாதம் 14ஆம் தேதியாகும்.

ஆனால் அவை இரண்டிற்கும் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக இரண்டு பிறந்தநாள் கேக் வழங்கப்பட்டது.தற்போதைய ஒப்பந்தத்தின்படி குட்டிப் பாண்டா லீ லீக்கு இரண்டு வயதாகும் போது அது சீனாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.