இணையத்தில் கசிந்த பெண்களின் தவறான புகைப்படத்தை வைத்து மிரட்டல் விடுத்த ஆடவருக்கு சிறை

Photo: Getty

இணையத்தில் கசிந்த தவறான புகைப்படங்களை வைத்துக்கொண்டு 2 பெண்களை மிரட்டியதற்காக 27 வயது மாணவருக்கு 15 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹேக்கர் என்னும் அனுமதியின்றி தகவலை திருடும் கும்பலால் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண்களின் தவறான புகைப்படங்களை அவர் பதிவிறக்கம் செய்துள்ளார்.

எதிர்கால தொற்றுநோய்கள் பற்றி இனி அச்சம் வேண்டாம் – சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்

சிங்கப்பூர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் முன்னாள் மாணவரான அவர், அதன் பின்னர் ஆன்லைன் வழியே தன் பெயரை மாற்றிக்கொண்டு இரண்டு பெண்களை தொடர்புகொண்டுள்ளார்.

தன்னிடம் உங்களின் தவறான புகைப்படங்கள் இருப்பதாக மிரட்டி, அதனை இணையத்தில் கசியவிடுவதாகவும் மிரட்டி உள்ளார் அவர்.

இதனை அடுத்து, போலியாக தகவல்தொடர்பு மூலம் மிரட்டல் விடுத்த இரண்டு குற்றச்சாட்டுகளின் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், டாரில் லிம் ஜின் சோ என்ற அவருக்கு நேற்று நவம்பர் 2 ஆம் தேதி 15 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அனைத்து HDB குடியிருப்பு கார் பார்க்கிங்களிலும் 12,000 மின்-வாகன சார்ஜிங் அமைப்புகள்!