“சிரமத்திற்கு மன்னிக்கவும்! எப்படியும் ஒரு மாதமாகி விடும்”, சிங்கப்பூர் பாஸ்போர்ட் குறித்து ICA வெளிப்படையாக வெளியிட்ட அறிவிப்பு!

சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அதிகப்படியான பாஸ்போர்ட் விண்ணப்பங்களை கையாள்வதால், சிங்கப்பூர் மக்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால், குறைந்தது ஒரு மாதமாகிவிடும்.

“அதிகமான பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் காரணமாக, குறைந்தது ஒரு மாதமாவது நீண்ட செயலாக்க நேரத்தை எதிர்பார்க்கவும்” என்று ICA தனது இணையதளத்தில் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரரின் புகைப்படம் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால் செயலாக்க நேரம் இன்னும் அதிகமாக இருக்கும்.

கடந்த வாரம், கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன் 2,000 பாஸ்போர்ட் விண்ணப்பங்களை தினமும் பெறுவதாக ஐசிஏ கூறியது. தற்போது அது 60 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவிட்-19 எல்லைக் கட்டுப்பாடுகளுடன் 1 மில்லியன் காலாவதியான பாஸ்போர்ட்டுகளின் தேவையே இதற்குக் காரணம் என்று அரசு கூறியது.

அடுத்த சில மாதங்களில் பயணத் திட்டங்களைக் கொண்ட சிங்கப்பூரர்கள்,  பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க வேண்டியவர்கள் தங்கள் விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் ICA இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பக் கட்டணம் S$70 ஆகும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் முடிவு அறிவிக்கப்படும். அவர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஐசிஏ இ-சேவை போர்டல் மூலமாகவும் பார்க்கலாம்.

அங்கீகரிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர்களுக்கு SMS, மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் 27 நியமிக்கப்பட்ட தபால் அலுவலகங்கள் அல்லது ICA அலுவலகத்தில் இருந்து தங்கள் பாஸ்போர்ட்டுகளை பெறலாம்.

அடுத்த ஆறு மாதங்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிடவில்லை என்றால், அவர்களது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என ஐசிஏ கடந்த வாரம் சிங்கப்பூரர்களுக்கு நினைவூட்டியது.