முன்னாள் பிரதமர் திரு.லீ குவான் இயூவுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து 10 ஆண்டுகளாக பேனர் வைக்கும் தமிழர்!

viral Photo

 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த ஆண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த பாபு, குடும்ப வறுமை காரணமாக, வேலைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். இதனால் அவரது குடும்பத்தில் பொருளாதார நிலை வளர்ச்சிக் கண்டது.

அதிக அளவில் படையெடுத்த வெளிநாட்டு ஊழியர்கள் – சட்டென்று எகிறிய சிங்கப்பூர் மக்கள்தொகை

பொருளாதார நிலை உயர காரணமான, மறைந்த சிங்கப்பூரின் தந்தையும், முன்னாள் பிரதமருமான திரு. லீ குவான் இயூவுக்கு நன்றித் தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளன்று தனது பூர்வீக வீட்டின் முன்பு பெரிய அளவிலான பேனரை வைப்பதை கடந்த 10 ஆண்டுகளாக வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், கடந்த செப்டம்பர் 16- ஆம் தேதி அன்று திரு. லீ குவான் இயூவின் 100- வது பிறந்தநாளையொட்டி, பாபு தனது குடும்ப உறுப்பினர்களின் படங்களுடன் பேனர் வைத்திருந்தார். அதில், “சிங்கப்பூரில் தமிழை ஆட்சி மொழியாக்கிய உன்னத தலைவர்….மண் வீட்டில் வாழ்ந்த எங்களை மாடி வீட்டில் வாழ வைத்த தெய்வமே!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உயரும் மின்சார கட்டணம் – நீங்கள் தங்கும் இடத்திற்கு கட்டணம் எவ்வளவு..? – தெரிந்துகொள்ளுங்கள்

இது குறித்து பாபு கூறுகையில், “சிங்கப்பூரில் எங்கள் உழைப்புக்கு ஏற்ற மரியாதையும், ஊதியமும் கிடைத்துள்ளது. எங்களை வாழவைத்த முன்னாள் பிரதமர் திரு. லீ குவான் இயூவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வாழ்த்து பேனரும், நினைவு நாள் பேனரும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக வைத்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.