எதிர்பாராத நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி..! எல்லா தடைகளையும் உடைத்து “சிறிய” நாடான சிங்கப்பூர் நிகழ்த்திக்காட்டிய அதிசயம்!

சிங்கப்பூரும் ஒரு காலத்தில் மலேஷியாவுடன் இணைந்து அதனுடைய ஒரு பகுதியாக இருந்தது. லீ குவான் யூ பொறுப்பில் தனியாக இயங்கிக் கொண்டிருந்தது.

1957இல் மலேஷியா பிரிட்டிஸ்காரனிடம் இருந்து சுதந்திரம் வாங்கிய சமயத்தில் துங்கு அப்துல் ரஹ்மான் என்பவர் பிரதமராக இருந்தார். அதற்குப் பிறகு மலேசியாவுடன் அண்டை நாடுகளை இணைத்துக் கொள்ளும் முயற்சியில் துங்கு இறங்கினார்.

சிங்கப்பூர், சபா, சரவாக், புரூணை, மலேசியா இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. லீ குவான் யூ மலாயாவுடன் (மலேசியாவின் பழைய பெயர்) அதிராகப்பூர்வமாக இணைந்து கொள்ள மிக ஆர்வமுடன் இருந்தார்.

இறுதியில் சபா, சரவாக் மட்டும்தான் மலாயாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. புரூணை சுல்தான் இணைப்பு ஆலோசனையை நிராகரித்து விட்டார். அதில் அவருக்கு விருப்பம் இல்லை. தனி நாடாக இயங்குவதையே சுல்தான் விரும்பினார்.

சில அரசியல் காரணங்களுக்காக துங்கு சற்றும் எதிர்பாரா வகையில் சிங்கப்பூரை இறுதி நேரத்தில் ஒதுக்கி விட்டார். தனி நாடாக இயங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். சற்றும் எதிர்பார்க்காத இந்த அறிவிப்பால் மிகுந்த வேதனையுடன்; கண்ணீருடன் லீ குவான் யூ விடைபெற்றார்.

மலேசியா மலாய் இன மக்களுக்கு மட்டுமே சொந்தம் என்று மலேசியா அரசு சட்டம் கொண்டு வந்ததும், அதை சிங்கப்பூர் நகரில் இருந்த சீனர்கள் கடுமையாக எதிர்த்து மலேசியாவில் இருக்கும் மூன்று இனத்தவருக்கும் சம உரிமை வேண்டும் என்று குரல்கொடுத்தனர்.

மேலும் சிங்கப்பூரை மலேசியாவின் வர்த்தக தலைநகராக அங்கீகரிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர், இந்த மாதரி காரணங்களால் மலேசியா நாடு சிங்கப்பூர் நகரை வேண்டாம் என்று நிராகரித்ததால் தான் தனி நாடாக உருவாகியது.

பிரிந்து போனதால் இன்று சிங்கைக்கு இலாபம் தான். நட்டம் ஒன்றும் இல்லை.  அதே போல்தான் அன்றைக்கே புரூணையும் புத்தியாக பிழைத்துக் கொண்டது. இன்று உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக உள்ளது. காரணம், அதனுடைய எண்ணெய் வளம்.