நேரடியாக ஒளிபரப்பாகும் பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை – என்ன சொல்லப் போகிறார் பிரதமர் லீ?

PM Lee Ramadan Tamil Puthandu
(PHOTO: MCI)
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் எதிர்வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தேசிய தினப் பேரணி உரை நிகழ்த்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத் தலைமையகத்தில் உரையாற்றவிருக்கிறார்.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:45 மணியளவில் பிரதமர் லீ மலாய் மொழியில் உரையைத் தொடங்குவார்.

மாண்டரின் மொழியில் இரவு ஏழு மணியிலிருந்து உரையைத் தொடருவார்.பின்னர் இரவு எட்டு மணியிலிருந்து ஆங்கிலத்தில் உரையை நிகழ்த்துவார் என்று கூறப்படுகிறது.
இந்த தேசிய தினப் பேரணி உரை மிக முக்கியமான அரசியல் உரையாகக் கருதப்படுகிறது.மேலும் இந்தப் பேரணி உரையில் நாட்டின் கொள்கை மாற்றங்கள்,இலக்குகள் ஆகியவை குறித்துப் பேசப்படுவது வழக்கம்.

பிரதமர் லீயின் தேசிய தினப் பேரணி உரை உள்ளூர் வானொலி,தொலைக்காட்சி போன்றவற்றில் நேரடியாக ஒளிபரப்பாகும்.மேலும் பிரதமர் அலுவலகத்தின் யூடியூப் அதிகாரப்பூர்வ சேனலிலும்,திரு.லீயின் முகநூல் பக்கத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.