துணிவுடன் வழக்குப் பதிவு செய்த வாரிசு! – சாதகமான தீர்ப்பைப் பெற்ற வாரிசு!

JUDGEMENT

சிங்கப்பூரில் பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே சொத்துத் தகராறு ஏற்பட்டது.தஞ்சோங் பகாரில் வீட்டுரிமை குறித்து பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இறுதியாகப் பேரனுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.திடீரென சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் வீட்டுக்கு உரிமை கோரி அவரது அம்மா வழக்கு தொடுத்தார்.இறந்தவர் உயில் எதுவும் எழுதாத நிலையில் தாய் எவ்வாறு உரிமை கோர முடியும் என்று பாட்டியை எதிர்த்து பேரன் வழக்குப் பதிவு செய்தார்.

உயிரிழந்தவரின் ஒரே வாரிசு என்றாலும்,மகன் தந்தையுடன் அதிகம் தொடர்பில் இருந்ததில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.நீதிமன்றத்தில் இதுபோன்ற விவாதங்களுக்குப் பிறகு பேரனுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது.

இருவருக்கும் இடையே நடந்த வழக்கில் 26 வயது பேரனுக்கு, தஞ்சோங் பகாரில் உள்ள அந்தக் கழக வீடு சொந்தம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.பெற்றோர் சொத்து பெற்ற பிள்ளைக்கே சொந்தம் ஆகும் என்பதால் தந்தையின் வீட்டுக்கு அவருடைய ஒரே மகன் வாரிசு என்று நீதிபதி கூறினார்.