இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter Page

புயல், மழை, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரின் அண்டை நாடுகளான மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று (21/12/2021) கடிதம் எழுதியுள்ளார்.

‘கோவை, திருவனந்தபுரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை’- டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியது ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம்!

அதன்படி, மலேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சைபுதீன் அப்துல்லா (Minister of Foreign Affairs of Malaysia Saifuddin Abdullah) மற்றும் பிலிப்பைன்ஸ் குடியரசின் வெளியுறவுத்துறை செயலர் தியோடோரோ எல் லோக்சின் ஜூனியர் (Secretary of Foreign Affairs of the Republic of the Philippines Teodoro L Locsin Jr) ஆகியோருக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில், இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் அழிவுகளுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மலேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சைபுதீன் அப்துல்லாவுக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் எழுதிய கடிதத்தில், “மலேசியாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகள் குறித்து நான் வருத்தமடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிங்கப்பூர் அனுப்பிய மருத்துவப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட ஃபிஜி!

இந்த இக்கட்டான நேரத்தில் சிங்கப்பூர் மலேசியாவுடன் உறுதுணையாக நிற்கிறது. மலேசிய அரசாங்கம் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகிறது, மேலும் மலேசிய மக்கள் இந்த நெருக்கடியை வலிமையுடனும், துணிச்சலுடனும் சமாளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் குடியரசின் வெளியுறவுத்துறைச் செயலர் தியோடோரோ எல் லோக்சின் ஜூனியருக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த டிசம்பர் 16 முதல் 17- ஆம் தேதி வரை பிலிப்பைன்ஸில் ராய் புயல் ஏற்படுத்திய இறப்புகள் மற்றும் அழிவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை ஏற்கவும். கொரோனா போராட்டத்திற்கு இடையில் பல குடும்பங்கள் தங்கள் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்திருப்பது கவலையைத் தருகிறது.

டிச.29 முதல் விசாகப்பட்டினம், சிங்கப்பூர் இடையே விமான சேவை- ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

இந்த இக்கட்டான நேரத்தில் பிலிப்பைன்ஸுக்கு தேவையான எந்த உதவியையும் வழங்க சிங்கப்பூர் தயாராக உள்ளது. இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் பிலிப்பைன்ஸ் மக்களுடன் உள்ளன. மேலும் இந்த இயற்கை பேரழிவைச் சமாளித்து பிலிப்பைன்ஸ் வலிமையுடன் திரும்ப விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.