வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வரி தள்ளுபடியை நீட்டித்து உள்ள சிங்கப்பூர் அரசாங்கம் – இந்தியா உட்பட பல்வேறு ஆசிய நாடுகள் பயனடையும்

Photo: Change.Org

சிங்கப்பூரில் பல்வேறு தொழில் துறைகளில் தொடர்ந்து ஆள் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை சிங்கப்பூர் அரசாங்கம் ஒப்புக்கொண்டு ,கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரிச்சலுகையை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

தொடர்ச்சியான மனித வள பற்றாக்குறை மற்றும் அதிக வணிகச் செலவுகள் போன்ற அழுத்தங்களை தணிக்க உதவும் பல ஆதரவு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக லெவி தள்ளுபடி நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தேசிய வளர்ச்சி அமைச்சகம் மற்றும் மனித வள அமைச்சகம் தெரிவித்தது.

சிங்கப்பூர் அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த தள்ளுபடியானது Covid-19 வைரஸ் தொற்றினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதாகும்.இந்தியா உட்பட ஆசிய நாடுகளிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்யும் CMP துறைகளுக்கு தள்ளுபடியை நீட்டிக்கிறது. சிங்கப்பூர் பெரும்பாலான வெளிநாட்டு தொழிலாளர்களை சீனா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை 6434 Covid-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. Covid-19 வைரஸ் தொற்று காரணங்களால் ஏற்படும் வெளிநாட்டு மனித வள சம்பளத்தில் அதிகரிப்பை கருத்தில் கொண்டு ,ஒப்பந்த தொகையை சரி செய்வதற்கு மதிப்பீட்டாளர்களிடம் இருந்து உறுதிமொழியை பெற அனுமதிக்கிறது.

அயல்நாட்டு தொழிலாளர்களுக்கான லெவி தள்ளுபடி இந்த மாத இறுதியில் முடிவடைய இருந்த நிலையில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் இந்த ஏற்பாடுகளின் கீழ் தள்ளுபடி நிவாரண காலம் மீண்டும் மூன்று மாதங்களுக்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.