இந்தியாவின் இ-விசா சிறப்பு திட்டத்தில் அதிரடி மாற்றங்கள்.!

சிங்கப்பூரில் உள்ள இந்திய ஹை கமிஷன், இந்தியாவின் இ-விசா சிறப்பு திட்டத்தில் பின்வரும் மாற்றங்களை தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் இந்திய உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இ-விசா மாற்றங்கள் பின்வருமாறு;

(i) சுற்றுலாப்பயணிகளுக்கான குறுகிய கால இ-விசா, 25 அமெரிக்க டாலர் விசா கட்டணத்துடன் ஒரு மாத காலம் செல்லுபடியாகும்.

(ii) பருவகால (ஏப்ரல்-ஜூன்) சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கத்தில், 25 அமெரிக்க டாலர் விசா கட்டணம் 10 அமெரிக்க டாலராக குறைக்கப்பட்டுள்ளது.

(iii) 80 அமெரிக்க டாலர் கட்டணத்துடன் வழக்கமான இ-விசாவில், தற்போது அனுமதிக்கப்பட்ட 1 வருடத்திலிருந்து 5 ஆண்டுகளாக, பல நுழைவுகளுடன் (Multiple Entry) அதிகரிக்கப்பட்டுள்ளது.

(iv) ஒரு வருட இ-டூரிஸ்ட் விசாவிற்கான கட்டணம் 80 அமெரிக்க டாலரிலிருந்து 40 அமெரிக்க டாலராகக் குறைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல் அறிய; https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html என்ற முகவரியை பார்வையிடவும்.