சடலத்துடன் லிப்டில் சிக்கிய குழு! – விரைந்து செயல்பட்ட SCDF;மீட்கப்பட்டார்களா?

lift scdf rescue
சிங்கப்பூரில் இறந்தவரின் உடலை அனுப்பிக் கொண்டிருந்த 6 பேர் லிப்டில் சிக்கிக் கொண்டனர்.இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் முகநூலில் அக்டோபர் 5-ம் தேதி பகிரப்பட்டது.
அக்டோபர் 4 ஆம் தேதியன்று பிளாக் 760 ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 74 இல் சம்பவம் நிகழ்ந்தது.இறந்தவரின் உடலை எடுத்துச் சென்ற போது இந்த குழு சுமார் 50 நிமிடங்கள் லிப்டில் சிக்கிக்கொண்டது.குழுவினரை மீட்பதற்கான முயற்சியாக லிப்ட் கதவுகளைத் திறக்க ஒரு குடை பயன்படுத்தப்பட்டது.
ஆனால்,அது அந்த இடத்தில் சிக்கிக்கொண்டது.மாடிகளுக்கு இடையே நின்ற லிப்டின் டிஸ்ப்ளே பேனல் மூடப்பட்டது.சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) பணியாளர்கள் சிக்கியவர்களை மீட்க அங்கு விரைந்தனர்.
அங்கிருந்த லிப்ட் தொழில்நுட்ப வல்லுனராகச் செயல்பட்ட மற்றொரு நபர் லிப்ட் கதவை வெளியில் இருந்து திறக்க சாவி போன்ற ஒன்றை பயன்படுத்தினார்.

மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளே இருக்கும்போது லிப்ட் பழுதடைவது முதல்முறையல்ல என்று கூறப்படுகிறது.லிப்ட்களுக்கு அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட சுமை என்ன என்பது அந்தத் தொகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை.
இறந்தவரின் உடலுடன் 6 பேர் லிப்டில் சிக்கிய நிலையில் உடனடி உதவிக்காக 2.05 மணியளவில் SCDF-க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் ஒரு நபர் லேசான காயங்களுக்கு ஆளானார்.ஆனால் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார்.