திக்குமுக்காடச் செய்யும் கொக்கோ கோலாவின் புதிய சுவை பானம் – சிங்கப்பூரில் மே 16 முதல் விண்வெளி பானம் அறிமுகம்

coca cola

பிரபல குளிர்பான நிறுவனமான Coca-Cola வெண்ணிலா உட்பட பல வெற்றிகரமான சுவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.தற்பொழுது குளிர்பான சுவைகளின் விரிவுபடுத்தும் நோக்கத்தில் Coke Starshine என்ற வகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சுவை எவ்வாறு இருக்கும் என்று தெளிவாக விளக்கவில்லை. நிறுவனத்தின் புதிய குளிர் பான வகை மிகவும் சுவாரசியமானது.

இந்தப் புதுவகை பானத்தை “விண்வெளியில் ஈர்க்கப்பட்ட சர்க்கரை இல்லாத கோக் பானம் ” என்று Coca-Cola விவரிக்கிறது.தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் புதிய சுவைக்கு சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த சுவை பானம் சிங்கப்பூர் முழுவதும் உள்ள மளிகை கடைகளில் கிடைக்கும். மேலும் Amazon,Shopee,Lazada ,Fair price,Pandamart மற்றும் 7-Eleven Stores போன்றவற்றில் இவற்றை வாங்கலாம்.

Starshine-ன் சுயவிவரம் மற்றும் சுவை என்னவென்று தெளிவான ஒருமித்த கருத்து இல்லை .யூட்யூபில் பானத்தின் மதிப்புரைகள் பல்வேறு வகையாக குறிப்பிடப்பட்டுள்ளன. எதிர்வரும் மே 16ஆம் தேதி வரை பானத்தின் அதிகாரப்பூர்வ அறிமுகம் சிங்கப்பூரில் இல்லை என்றாலும் Paya Lebar-ன் 7- Eleven -ல் ஒரு கேன் ஒன்றுக்கு $2 என்ற விலையில் வாங்க முடியும்.

பானத்தின் நிறம் அருந்துபவர்களுக்கு Ribena-வை நினைவூட்ட கூடும் என்று கூறப்படுகிறது. விண்வெளியில் இருக்கும்போது உணவின் சுவை எவ்வாறு இருக்கிறது என்று குழப்பமடைய செய்யும். அதேபோல இந்த பானத்தின் சுவை நமக்கு பிடிக்கிறதா இல்லையா என்பதைக் கூட முடிவு செய்ய முடியாது என்று கூறப்படுகிறது. குளிர்பானங்கள் பலவிதம். அவற்றில் இந்த சர்க்கரை அல்லாத விண்வெளி கோக் ஒருவிதம். வாய்ப்பு கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள்.