சிங்கப்பூரில் தீபாவளி உத்ஸவம் – 2019 திருவிழா !

LISHA Deepavali Utsavam 2019 - Light Up Ceremony and Street Parade

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் LISHA சார்பாக ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதே போல் இந்த வருடமும் கொண்டாடப்பட இருக்கிறது.

இந்த கொண்டாட்டம் குறித்த செய்திகள் மற்றும் காணொளிகள் நாம் முன்னரே பதிவு செய்திருந்தோம்.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான தீபாவளி உத்ஸவம் – 2019 ஒளி ஏற்றும் விழா மற்றும் தெரு அணிவகுப்பிற்கான டிக்கெட்டுகள் தற்போது Indian Heritage சென்டரில் பெறலாம்.

டிக்கெட்கள் காலை 10 – இரவு 7 மணி வரை மட்டுமே கிடைக்கும். திங்கள் கிழமைகளில் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது.

குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. முதலில் வருபவர்கள்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கண்டிப்பாக ஒருவருக்கு 5 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.