இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சைக்கிளில் வந்த இளைஞருக்கு ‘லிஷா’ உற்சாக வரவேற்பு!

Photo: Lisha Official Facebook Page

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள டெல்லி பல்கலைக்கழகத்தில் (Delhi University) படித்து பட்டம் பெற்றவர் ஜெர்ரி சௌத்ரி (Jerry Chowdhary) என்ற இளைஞர். இவர் நல்ல உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். மேலும், அதற்கான வியூகங்களை வகுத்தார். அதனை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சைக்கிளில் செல்வது எனவும், பயணம் செய்யும் வழியில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து பயணத்தைத் தொடங்கினார்.

‘தைப்பூசத் திருவிழா’- ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தனி ஆளாக பயணத் தொடங்கிய இளைஞர், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா ஆகிய நான்கு நாடுகளைக் கடந்து சிங்கப்பூரை வந்தடைந்தார். அந்த இளைஞருக்கு, ‘லிஷா’ (Lisha) நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், இளைஞருக்கு காயத்ரி உணவகம் (Gayathri Restaurant) பாராட்டு விழாவை நடத்தி கௌரவித்தது.

மகாத்மா காந்தி நினைவு தினம்- சிங்கப்பூருக்கான இந்திய தூதர் மரியாதை!

தனி நபராக, யாருடைய துணையின்றி சுமார் 7,000 கிலோ மீட்டரை 101 நாட்களில் கடந்த அந்த இளைஞருக்கு, லிஷா நிர்வாகிகள் மட்டுமின்றி, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.