நடிகர்கள் அர்ஜுன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை நேரில் சந்தித்த ‘Lisha’ குழுவினர்!

Photo: Lisha Official Facebook Page

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் பாரம்பரிய சங்கம் (Little India Shopkeepers and Heritage Association) என்றழைக்கப்படும் ‘Lisha’, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பாரம்பரிய விழாக்களை, சிங்கப்பூரில் உள்ள தமிழர்களுடன் இணைந்து மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. மேலும், குறைந்த வருமானம் கொண்ட தமிழர் குடும்பத்திற்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. இந்த ‘Lisha’ அமைப்பின் தலைவராக சங்கரநாதன் பதவி வகித்து வருகிறார்.

வெளிநாட்டு ரிமோட் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா? – சிங்கப்பூர் நிறுவனங்களின் குறைந்த சம்பள போக்கு ஒரு காரணமா?

இந்த நிலையில், ‘Lisha’ அமைப்பின் தலைவர் சங்கரநாதன் தலைமையிலான குழுவினர், தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக, கடந்த பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று தலைநகர் சென்னையில் உள்ள போரூரில் நடிகர் அர்ஜுன் அமைத்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்தனர். அத்துடன் ஆக்ஷன் கிங் அர்ஜுனைச் சந்தித்துப் பேசினர் ‘Lisha’ குழுவினர்.

இது குறித்து ‘Lisha’வின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “தமிழகத்தின் போரூரில் உள்ள ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றோம். அவரது 16 வருட முயற்சியாலும், அர்ப்பணிப்பாலும் தனது அன்புக்குரிய அனுமனுக்காக கனவுக் கோயிலைக் கட்டியுள்ளார்.

Photo: Lisha Official Facebook Page

நன்கு பராமரிக்கப்பட்டு, மிகுந்த அமைதியுடன் காணப்படுகிறது. இக்கோயில் பார்வையிடும் நேரங்களில் பொதுமக்களுக்கு திறந்திருக்கும். ஆஞ்சநேயர் சிலை 35 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்டது. இது ஒரு கல்லில் இருந்து செதுக்கப்பட்டுள்ளது. அனுமன் பக்தர்கள் அனைவரும் தவறாமல் தரிசிக்க வேண்டிய இடம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 28- ஆம் தேதி அன்று சென்னையில் ராஜ்கமல் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை ‘Lisha’ குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர்.

“வேலைல இருக்கணும்னா இத செய்”… 1 முதலாளிக்கு 5 வெளிநாட்டு ஊழியர்கள் பாதிப்பு – 100 முதலாளிகளுக்கு செக்!

இது ‘Lisha’ வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “உலகநாயகன் கமல்ஹாசனை அவரது ராஜ்கமல் அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் பாரம்பரிய சங்கத்தின் தலைவர் சங்கரநாதன். இருவரும் நீண்ட நேரம் உரையாடினர்.

தமிழ் மொழி மற்றும் லிட்டில் இந்தியா சிங்கப்பூர் பற்றி இருவரும் விவாதித்தனர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் சிங்கப்பூரில் இருந்த தருணங்கள் உட்பட பல நினைவுகளை கமல்ஹாசன் நினைவு கூர்ந்தார். மறக்க முடியாத சந்திப்பு. சங்கரநாதன் மற்றும் அவரது குழுவினரை சந்திக்க நேரம் ஒதுக்கிய கமல்ஹாசனுக்கு மிக்க நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.