தீபாவளி பண்டிகையையொட்டி, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள லிசா!

Photo: Lisha Official Facebook Page

வரும் அக்டோபர் 24- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தீபாவளி பண்டிகை (Deepavali Festival 2022) கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், இதற்கான தீபாவளி ஒளியூட்டு, கடந்த செப்டம்பர் 16- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியாவில் (Little India) தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை லிசா அமைப்பு (Lisha) செய்துள்ளது. இதில் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்து வருகின்றன.

சிங்கப்பூரில் இதுவரை தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்கும் நபர்கள் உஷார்

லிட்டில் இந்தியா உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இசைக்கருவிகள் வடிவிலான வண்ணமின் விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். அத்துடன் செல்ஃபி புகைப்படங்களையும் எடுத்து மகிழ்கின்றனர்.

அந்த வகையில், லிசா அமைப்பு ‘லிசா தீபாவளி கலை நிகழ்ச்சி’ (LISHA’s Deepavali Cultural Show 2022) என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது. வரும் அக்டோபர் 22- ஆம் தேதி அன்று மாலை 06.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை பாலி @ க்ளைவ் தெருவில் (Poli @ Clive Street) நடைபெறும். பாடல்கள், நடனங்கள், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை கலை நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளன. இது ஒரு அற்புதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துக் கொள்ளலாம். அனுமதி முற்றிலும் இலவசம். இது குறித்த மேலும் விவரங்களுக்கு லிசாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப பக்கங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத், சிங்கப்பூர் வழித்தடத்தில் ‘A350- 900’ விமானம் இயக்கப்படும்- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

இதனிடையே, தீபாவளியையொட்டி, சிங்கப்பூரில் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது. புத்தாடை வாங்க மக்கள் லிட்டில் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் குவிந்துள்ளனர்.