குப்பை போடுதல், புகைபிடித்தல் குற்றங்களுக்காக சுமார் 36,900 டிக்கெட்டுகள் வழங்கல்

கடந்த ஆண்டு குப்பை போடுதல் மற்றும் புகைபிடித்தல் குற்றங்களுக்காக சுமார் 36,900 டிக்கெட்டுகளை தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) வழங்கியுள்ளது.

இதே குற்றங்களுக்காக, 2019ஆம் ஆண்டில் சுமார் 49,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது என்று NEA இன்று (பிப்ரவரி 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்ல விரும்பும் பயணிகளுக்கு…

கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட COVID-19 கட்டுப்பாடு நடவடிக்கைகள் காரணமாக குறைவாக குற்றச்சாட்டுகள் பதிவானதாக குறிப்பிட்டுள்ளது.

வீட்டிலிருந்து அதிகமான மக்கள் பணிபுரிவதால், பொதுமக்கள் அதிகம் செல்லும் பகுதிகளான, போக்குவரத்து மற்றும் மால்கள் அல்லது திறந்தவெளிகள் போன்றவற்றில் குப்பைகள் குறைவான போடப்பட்டதாக NEA கூறியுள்ளது.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட டிக்கெட்டுகளில், 18,500 புகைபிடித்தல் குற்றங்களுக்காகவும், 18,400 குப்பைத் போடுதலுக்காகவும் வழங்கப்பட்டன.

மேலும், தடைசெய்யப்பட்ட HDB பகுதிகளில் புகைபிடிதற்காக கடந்த ஆண்டு சுமார் 1090 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

முகக்கவசம் அணியாமல், கூட்டம் கூடியதற்காகவும் 34 பேருக்கு அபராதம்