சிலோசோ பீச்சில் நீரில் மூழ்கியதாக கூறப்படும் சிறுமி… என்ன நடந்தது? (வீடியோ இணைப்பு)

Little girl reportedly drowned Siloso Beach
Mothership

சென்டோசாவில் உள்ள சிலோசோ பீச்சில் கடந்த டிசம்பர் 26 அன்று மாலை 6:30 மணியளவில் சிறுமி நீரில் மூழ்கியதாக Zaobao.com.sg தெரிவித்துள்ளது.

சிறுமி தன்னுடைய தந்தையால் நீரில் இருந்து மீட்கப்படுவதற்கு முன்பு, சிறிது நேரம் நீருக்கடியில் மூழ்கியதை புரிந்து கொள்வதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

குடியிருப்பில் பல நாட்களாக வீசிய துர்நாற்றம்: அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

அந்த சிறுமியின் வயது என்ன என்பது பற்றிய தகவல் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

சைலோசோ பீச் வாக்கில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அன்று மாலை 6:35 மணிக்கு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அதன் பின்னர், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சிறுமி சுயநினைவுடன் இருந்தார்.

இந்த சம்பவம் கடற்கரைக்குச் செல்வோர் மற்றும் அருகிலுள்ள பார்வையாளர்கள் மத்தியில் எச்சரிக்கையை ஏற்படுத்தியது என Zaobao.com.sg தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் போலீஸ் கார்கள் மற்றும் SCDF ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வீடியோவில் காணப்பட்டன, அந்த வீடியோ டிசம்பர் 26 அன்று பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது.

அந்த வீடியோவின் தலைப்பில், “இன்று மதியம் 7 மணிக்கு சைலோசோ கடற்கரையில். என்ன நடந்தது என்று யாருக்குத் தெரியும்?” என குறிப்பிடப்பட்டது.

லாரி மூலம் போதைப்பொருள் கடத்தல்: வளைத்து பிடித்த ICA – 24 வயது வெளிநாட்டு ஓட்டுநர் கைது