சிங்கப்பூரில் வேனை தவறாக இயக்கி வடிகாலில் சாய்த்த 13 வயது சிறுமி.!

(photo: mothership)

சிங்கப்பூரில் 13 வயது சிறுமி ஒருவர் வேனில் நுழைந்து, தவறான கியரை செலுத்தி, வேனின் வேகத்தை விரைவூட்டி, அதனை பின்னோக்கி ஒரு அரண் மீதி செலுத்தி, மேலும் அதனை சாய்வில் இருந்து விழுத்தி, இறுதியாக வேனை வடிகாலில் நுழைந்துள்ளார். இந்த சம்பவத்தில் அந்த சிறுமிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த விபத்தானது ஜூன் 23 மதியம், பிளாக் 40 டெலோக் பிளங்கா ரைஸுக்கு முன்னால் உள்ள கார் பார்க்கிங்கில் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது 15 வயதான ரானியா என்ற டீனேஜ் பெண், வேன் தனது மாமாவுக்கு சொந்தமானது என்றும் வேனியில் இருந்து எதையோ எடுக்குமாறு தனது சகோதரியிடம் மாமா சொன்னதாகவும், ஆனால் ரானியாவின் சகோதரி வேனின் சாவியை இவர்களது தோழியான 13 வயது சிறுமியிடம் கொடுத்ததாகவும், அந்த சிறுமி வேனில் ஏறி என்ஜினை ஸ்டார்ட் செய்து தவறாக செலுத்தி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்தது.வடிகாலில் விழுந்து, வேனின் பின்புறம் சேதமடைத்ததாக தெரிவித்தார்.

மேலும், செய்தியாளரிடம் ரானியா கூறுகையில், அந்த சிறுமி பின்னோக்கி விழுந்ததாகவும், அவளின் கண்ணாடிகள் தட்டப்பட்டதாகவும், வேன் அரணை தாக்கும் வரை அவளால் நிறுத்த முடியவில்லை எனவும், வேனின் பின்புறம் வடிகாலில் சிக்கியதும் அவள் காரில் இருந்து தவழ முற்பட்டதாகவும், இருப்பினும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றார்.

விபத்துக்குப் பிறகு, ரானியாவின் சகோதரி அந்த சிறுமி மற்றும் அவர்களது குடும்பத்தினர் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தகவல் அளித்தனர்.

இரண்டு சகோதரிகளின் மாமாவான வேனின் உரிமையாளர் குமார், அவரது மருமகள் சொன்னதை உறுதிப்படுத்தினார். அவர்கள் அனைவரும் குழந்தைகள், அதனால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை எனவும் விபத்து குறித்து தெரியவருவதற்கு முன் மாலை 3 மணியளவில் போக்குவரத்து போலீசாரிடமிருந்து தனக்கு ஒரு அறிவிப்பு வந்ததாக தெரிவித்தார்.