லிட்டில் இந்தியா பகுதியில் இப்படியெல்லாம் நடக்குதா?… அனுபவத்தை பகிர்ந்து எச்சரிக்கும் நபர்

liquor-rules-amendment jan.2 2024

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் விற்கப்படும் அதிக விலை உணவு குறித்து ஒருவர் புகார் கூறியுள்ளார்.

குறைந்த காசுக்கு உணவு சாப்பிடலாம் என நினைத்த சிங்கப்பூர் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் மேலும் ஒரு ஊழியர் மரணம்; கடலில் தவறி விழுந்து பலி – 4 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சடலம்

கொஞ்சம் கூட்டு, கோழிக்கறி மற்றும் சாதம் ஆகியவற்றுக்கு S$15 கட்டணம் வசூலிக்கப்பட்டது அவருக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

இச்சம்பவம் லிட்டில் இந்தியா உணவகத்தில் நடந்ததாக அந்த பெண் பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

அந்த உணவையும் அது குறித்த புகாரையும் அந்த பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், இதற்கு பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வேறு வழியில்லாததால் அந்த நேரத்தில் அவர் 24 மணிநேரம் இயங்கும் அந்த உணவகத்திற்கு சென்றுள்ளார். அது எந்த கிளை உணவகம் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

இனிமேல் அந்த உணவகத்துக்கு செல்ல போவது இல்லை என்றும், இதுவே முதலும் கடைசியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு இன்பச் செய்தி கூறிய “முஸ்தபா சென்டர்”