S$1,000 & வேலை அனுமதி அடங்கிய பர்ஸை தொலைத்து கலங்கிய வெளிநாட்டு ஊழியர்… கடவுள் போல வந்து உதவிய சக ஊழியர்!

wallet-lost-found-little-india

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் லிட்டில் இந்தியாவில் கடந்த பிப்ரவரி 14 அன்று தனது பர்ஸை தொலைத்தார்.

பின்னர் பேஸ்புக் பதிவில், அதைக் கண்டுபிடிக்க வேண்டி பொதுமக்களிடம் உதவி கோரி அவர் வேண்டுகோள் விடுத்தார்.

S Pass வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் உயர்வு..!

ஹபீப் கான் என்ற ஊழியர், முஸ்தபா சென்டரில் இருந்து லிட்டில் இந்தியா செல்லும் வழியில் அன்று மதியம் 2:30 மணியளவில் தனது பர்ஸை தொலைத்ததாக அந்த பதிவில் கூறினார்.

அவரது பர்ஸில் சுமார் S$1,000க்கும் அதிகமான பணமும், அவரது வங்கி அட்டை, அனுமதி அட்டை மற்றும் பிற தனிப்பட்ட ஆவணங்கள் இருந்தன. அவரின் அந்த பேஸ்புக் பதிவை அதிகமானோர் பகிர்ந்து கொண்டனர்.

பதிவு செய்த ஆறு மணி நேரம் கழித்து, அவருக்கு அதிசயம் காத்திருந்தது. ஆம், அந்த பதிவில் ஒருவர் பர்ஸை கண்டுபிடித்ததாக கமெண்ட் செய்தார்.

wallet-found-night

அதனை அடுத்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு, தனது பர்ஸ் கிடைத்தது என்றும் அதில் இருந்த அனைத்தும் அப்படியே இருந்ததாக ஹபீப் கான் கூறினார்.

மேலும், இறைவனுக்கு நன்றி கூறிய அவர், “பர்ஸை என்னிடம் திருப்பிக் கொடுத்தவர் சிறந்த மனிதர், அவருக்கு உண்மையில் பெரிய மனசு. அவருக்கு நன்றிகள் பல,” என்றும் கூறினார்.

“பாம்பின் கால் பாம்பறியும்” என்பார்கள் அதுபோல, ஒரு ஊழியரின் மன வேதனை இன்னொரு ஊழியருக்கு தான் தெரியும்.

சிங்கப்பூரில் Employment Pass வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் உயர்வு..!