லிட்டில் இந்தியாவில் போலீசிடம் வம்பு, ஆயுதத் தாக்கில் பங்கு.. குற்றத்தை ஒப்புக்கொண்ட ஊழியர்

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

மற்றொரு ஆடவரை தாக்க பங்கு வகித்த குற்றச்சாட்டில் எஸ்.மகேஷ்வரன் என்ற ஊழியர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அரசாங்க ஊழியர் ஒருவரை தாக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைச் செய்து ஜாமீனில் வெளியே வந்த எஸ்.மகேஷ்வரன், பின்னர் கயிற்றில் பிணைக்கப்பட்ட ஈட்டி போன்ற ஆயுதம் ஒன்றை தன் நண்பரிடம் வழங்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

கால்வாயில் விழுந்த கார்… சிக்கி தவித்த இருவரை உடனடியாக குதித்து மீட்ட வெளிநாட்டு ஊழியர் – குவியும் நன்றிகள்

அந்த ஆயுதத்தை பெற்ற ஷெரன் ராஜ் பாலசுப்ரமணியம், அதை வைத்து மற்றொரு நபரை குத்த பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஜூன் 3 அன்று, எஸ்.மகேஷ்வரன் கஸ்கேடன் சாலைக்கு ஆயுதத்தை தன்னுடன் எடுத்துச் சென்று, 23 வயதான ஷரன் ராஜ் பாலசுப்ரமணியத்திடம் கொடுத்துள்ளார்.

நீதிமன்ற ஆவணங்கள்படி, ஷரன் ராஜ் அந்த ஆயுதத்தை பயன்படுத்தி 23 வயது இளைஞரை தாக்கியுள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அந்த ஆடவர் சுயநினைவுடன் இருந்தார், தற்போது அவர் நன்றாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொந்தரவு செய்தது, ஆயுதம் வைத்திருந்தது மற்றும் போக்குவரத்து குற்றங்கள் செய்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை 29 வயதான மகேஷ்வரன் நேற்று திங்களன்று ஒப்புக்கொண்டார்.

ஷெரன் ராஜ் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

2020 நவம்பர் 30 ஆம் தேதி அன்று லிட்டில் இந்தியாவிலுள்ள டன்லப் ஸ்ட்ரீட்டில் குடிபோதையில் இருந்த மகேஷ்வரன், போலீஸ்காரர் ஒருவரை நோக்கி மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதும் இந்த குற்றச்சாட்டில் அடங்கும்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியரை மோதி தூக்கிவீசிய லாரி… சாலையை கடக்க முயன்றபோது ஏற்பட்ட சோகம் (வீடியோ)