அதிக வாடகையால் அவதிப்பட்டுவரும் லிட்டில் இந்தியா வணிகர்களுக்கு ஆதரவளிக்க கோரிக்கை!

(Photo: change.org)

இந்த தொற்றுநோய் அனைத்து வணிகங்களுக்கும் மறுக்கமுடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு மற்றும் பானம் விற்பனை மிகவும் கடினமான தொழில்களில் ஒன்றாகும். ஆன்லைன் மூலம் விற்பனை செய்பவர்கள் எப்படியேனும் பிழைத்து வருகின்றனர்.

ஆனால், கடந்த பத்தாண்டுகளாக உயரும் வாடகை விகிதங்களுடன் லிட்டில் இந்தியாவில் வணிகர்கள் தங்கள் மாறுபட்ட விற்பனையை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகின்றனர்.

வாழ்வாதாரம்

அவர்களின் வாழ்வாதாரம் உள்ளூர் சமூகங்கள் மற்றும் சுற்றுலாவை மட்டுமே சார்ந்துள்ளது, அதனால் லிட்டில் இந்தியா இன்று வரை தனித்துவமான வணிக மாதிரியாக திகழ்ந்து வருகிறது.

ஏற்கனவே ஒரு பெரிய சரிவை சந்தித்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளின் தற்போதைய விதிமுறைகள், வணிகர்களின் நிலைமையை இன்னும் மோசமாகியுள்ளது .

வாடகை தள்ளுபடி

அரசாங்கம் வாடகை தள்ளுபடி நடவடிக்கைகளை ஆரம்பித்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறது.

ஒருபுறம் நில உரிமையாளர்கள் தங்கள் குத்தகைதாரர்கள் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் சவால்கள் குறித்து பெரிதாக அக்கறை காட்டுவதில்லை எனவும் கூறப்படுகிறது.

கோரிக்கை

அதிகப்படியான வாடகை விகிதங்கள் ஏற்கனவே சில காலமாக ஆதிக்கம் செலுத்தும் பிரச்சினையாக இருந்தபோதிலும், நில உரிமையாளர்கள் தற்போது நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு குத்தகைதாரர்களின் வலியைப் பகிர்ந்து கொள்வதை கட்டாயப்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் பல ஆண்டுகளாக வணிகம் மேற்கொண்டு வரும் இது போன்ற வணிகர்களுக்கு அனைத்துவிதமான ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்பதே மக்கள் கருத்தாகும்.