லிட்டில் இந்தியாவில் உள்ள நாணய மாற்று வர்த்தகரிடம் திருட்டு – இருவர் நீதிமன்றத்தில்

ஹூன் சியான் கெங் கோவில்
Photo: TODAY Online

லிட்டில் இந்தியாவில் உள்ள நாணய மாற்று வர்த்தகரிடம் கைவரிசையை காட்டிய இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

சிராங்கூன் சாலையில் உள்ள பணம் மாற்று வர்த்தகரிடம் இருந்து அவர்கள் சுமார் S$134,000 தொகையை திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, மலேசியாவின் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டனர்.

மஹேந்திரன் என்ற 10 வயது சிறுவனை காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள்

கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி இந்த திருட்டு சம்பவம் நடந்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.

36 மற்றும் 70 வயதுடைய அந்த இருவரும், சிங்கப்பூர் டாலர்களை யூரோ மற்றும் அமெரிக்க டாலருக்கு மாற்றுவதாக சாக்குப்போக்கு சொல்லி பணம் மாற்று வர்த்தகரை அணுகியதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் கேட்ட தொகையை வர்த்தகரிடம் இருந்து பெற்றுவிட்டு இருவரும் தப்பியதாக சொல்லப்படுகிறது.

அதாவது கள்ளப்பணத்தை மாற்றாக கொடுத்து அவர்கள் தப்பி சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூர் விமானத் துறையில் சுமார் 4,300 க்கும் மேற்பட்ட வேலைகள்