லிட்டில் இந்தியாவில் களைக்கட்டிய பொங்கல் கொண்டாட்டங்கள்!

Photo: Lisha Official Facebook page

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியாவில் பொங்கல் பண்டிகைக்கான (Pongal Festival) ஒளியூட்டு தொடங்கியது. கிளைவ் தெருவில் நேற்று (07/01/2023) மாலை நடைபெற்ற விழாவில், பிரதமர் அலுவலக அமைச்சரும், தேசிய வளர்ச்சி மற்றும் நிதித்துறைக்கான இரண்டாவது அமைச்சருமான இந்திராணி ராஜா மற்றும் தேசிய வளர்ச்சித்துறை அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Minister for National Development of Singapore, Desmond Lee) ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு, ஒளியூட்டைத் தொடங்கி வைத்தனர். அதேபோல், சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் கலந்துக் கொண்டனர்.

நெருங்கும் பொங்கல் பண்டிகை: சென்னை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

விழாவில், தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைச்சாற்றும் வகையில், கரகாட்டம், பரத நாட்டியம், இன்னிசை நிகழ்ச்சிகள், மயிலாட்டம், குயிலாட்டம் இடம் பெற்றிருந்தனர். சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், சிங்கப்பூரர்கள் என சுமார் 200- க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். அதேபோல், கிளைவ் தெருவில் (Clive Street) தற்காலிகமாக மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பாரம்பரிய நாட்டு மாடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை தமிழர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரர்கள் கண்டு மகிழ்ந்ததுடன், புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டனர்.

Photo: Lisha Official Facebook Page

லிட்டில் இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அலங்கார வளைவுகள் காண்போரை வெகுவாக ஈர்க்கின்றன. இதனால் லிட்டில் இந்தியாவில் பொங்கல் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது என்றே கூறலாம்.

மோட்டார் சைக்கிள் திருட்டு… 23 வயதுடைய இருவர் அதிரடி கைது

பொங்கல் ஒளியூட்டு வரும் பிப்ரவரி மாதம் 5- ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பொங்கல் கொண்டாட்டங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.