லிட்டில் இந்தியாவில் 7 பேர் கைது… S$1 மில்லியன் பறிமுதல் – வீராசாமி சாலை, அப்பர் டிக்சன் சாலையில் அதிரடி

Little India raid 7 arrested 1m-seized
Credit: SPF

லிட்டில் இந்தியா பகுதியில் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதோடு சேர்த்து சுமார் S$1 மில்லியனுக்கும் அதிகமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொற்றுக்காலத்தின்போது கஷ்டப்பட்ட, சம்பளம் குறைக்கப்பட்ட ஊழியர்களுக்கு 8 மாதம் வரை போனஸ்

உரிமம் பெறாத கட்டண சேவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

கடந்த மே 5 முதல் 11 வரை வீராசாமி சாலை மற்றும் அப்பர் டிக்சன் சாலையில் உள்ள இரண்டு அலுவலகங்களில் வணிக விவகாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.

இதில் 26 மற்றும் 64 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS) உரிமம் இல்லாமல் எல்லை தாண்டிய பணப் பரிமாற்றச் சேவையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் பணம் மட்டுமல்லாமல், எட்டு மொபைல் போன்கள், பண நோட்டுகள் எண்ணும் மூன்று இயந்திரங்கள் மற்றும் பணம் அனுப்பிய பதிவுகள் இந்த வழக்கின் சாட்சிகளாக கைப்பற்றப்பட்டன.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் இது குறித்து தைரியமாக புகார் அளிக்கலாம்