லிட்டில் இந்தியாவில் சாதத்துக்கு கொடுக்கும் வெறும் குழம்புக்கு கட்டணம் வசூலிக்கும் இந்திய உணவகம் – அப்செட்-ஆன குடும்பம்

Little India restaurant
Stomp

லிட்டில் இந்தியாவில் உள்ள இந்திய உணவகம் ஒன்று சாதத்துக்கு வைக்கும் குழம்புக்கு $2 வசூலித்ததாக வயதான தம்பதியினர் வருத்தமடைந்தனர்.

கடந்த ஆகஸ்ட் 31 அன்று மதிய உணவு உண்பதற்காக வேண்டி அவர்கள் Buffalo சாலையில் உள்ள அல்-அபு உணவகத்திற்குச் சென்றதாக தம்பதியரின் மகன் ஸ்டாம்புடன் பகிர்ந்து கொண்டார்.

இந்திய ஊழியர்கள் உட்பட மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்: உயிர்போக காரணமாக இருந்த 3 பேருக்கு சிறை

உணவு சாப்பிடச் சென்ற அவர்களிடம் சாதம், கோழி மற்றும் காய்கறி கூட்டுகளுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

மேலும் அந்த உணவகத்தில் ஒரு முட்டை மட்டும் தனியாக விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும் இரண்டு முட்டையாக வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது ஒருபுறம் இருக்க.., சாதத்துக்கு குழம்பு ஏதும் அங்கு கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எல்லா இடங்களிலும் சாதத்துக்கு வெறும் குழம்பாவது வழங்கப்படும் என்றும், குழம்பு இல்லாமல் சாதம் எங்கு கொடுக்கப்படுகிறது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்னர் கொடுக்கப்பட்ட வெறும் எம்டி கோழி குழம்புக்கு $2 வெள்ளி கட்டணமாக வசூலிக்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தார்.

“சிங்கப்பூரில் உள்ள உணவகம் வெள்ளை சாதம் வாங்கும் போது சாதாரண குழம்புக்கு கட்டணம் வசூலிப்பதை நான் கேள்விப்படுவது இதுவே முதல் முறை” என்றும் அவரின் மகன் குறிப்பிட்டுள்ளார்.

“மற்ற சிங்கப்பூர் இந்தியக் உணவகங்கள் எதுவும் இவ்வாறு செய்வதில்லை என்றும், ரசீதில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணும் தவறானது” என்றும் அவர் சொன்னார்.

பின்னர் உணவகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, ‘சிங்கப்பூரில் யாரும் இலவசமாக குழம்பு தருவதில்லை’ என்று உணவகத்தின் உரிமையாளர் கூறியதாக வாசகர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் ஒரே தம்பதிக்கு பிறந்த 4 குழந்தைகளுக்கும் பிறந்த நாள் செப். 6 – வியக்கவைக்கும் குடும்பம்