லிட்டில் இந்தியாவில் சட்டவிரோத செயல்: ரகசிய கோட் வேர்ட்…ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

liquor-rules-amendment jan.2 2024

சிங்கப்பூரில் வாயில் மெல்லும் புகையிலைக்கு கடந்த 2016ம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் விற்பனை வழக்கமாக நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக சந்தர், டெஸ்கர் சாலைகளில் உள்ள சில கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

லிட்டில் இந்தியாவில் சட்டவிரோதமாக நடைபெறும் மெல்லும் புகையிலை விற்பனையை குறித்து ஆராய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் கடந்த 3 வாரங்களாக கண்காணித்து வந்தது.

இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிடுகையில், லிட்டில் இந்தியாவின் சாலைகள் மற்றும் சந்துகளில் சுற்றித்திரியும் சில ஆடவர்கள், கவலை இல்லாமல் விடுமுறை நாட்களை கழிக்க நண்பர்களைச் சந்திக்க வந்தவர்கள் போல் தெரிவார்கள்.

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ‘Mr and Mrs Mohgan’s Super Crispy Roti Prata’ கடை மீண்டும் திறப்பு!

ஆனால், இவர்களுக்கு மிக அருகில் சென்று பார்த்தால் இவர்களின் கண்கள் அங்குமிங்கும் நோட்டம் போட்டுகொண்டு, வாய் மென்மையாக ‘ஹான்ஸ் ஹான்ஸ்’ போன்ற சொற்களை அசை போட்டுக்கொண்டிருக்கும். இவர்கள் சிங்கப்பூரில் சட்டவிரோதமாகப் புகையிலை விற்கும் பெரிய இரு கட்டமைப்பைச் சேர்ந்த கள்ள வியாபாரிகள் ஆவார்கள்.

இவர்கள் பல்வேறு இடங்களில் மெல்லும் புகையிலை பொட்டலங்களை ஒளித்து வைத்து தேவைப்படுவோருக்கு விற்கவும், மேலும் அதே வேளையில் எங்கிருந்தாவது அதிகாரிகள் தென்பட்டால், உடனே கை சைகைகள் மூலமாக அல்லது குறுந்தகவலின் வாயிலாக ஒருவரை ஒருவர் எச்சரித்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை வீதிகளில் சட்டவிரோதமான பொருள்கள் விற்ற 81 பேர் கைது செயப்பட்டுள்ளனர் என சிங்கப்பூர் அறிவியல் ஆணையம் கூறியுள்ளது. வாயில் மெல்லும் புகையிலையை இறக்குமதி செய்த குற்றத்திற்காக 255 பேரும், அத்தகைய புகையிலை வைத்திருந்ததற்காக 457 பேரும் கைது செயப்பட்டுள்ளனர்.

மெல்லும் புகையிலையை இறக்குமதி செய்தாலோ அல்லது அதை விற்பனை செய்தாலோ $10,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். புகையிலையை வாங்கும் குற்றத்திற்காக அதிகபட்சமாக $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

வெளிநாட்டு ஊழியர்களின் Work pass அனுமதிக்கு தேவைகளுக்கு இது கட்டாயம் – தங்கும் விடுதி, கட்டுமான ஊழியர்களுக்கு Mandatory!