லிட்டில் இந்தியாவில் தொல்லை தரும் கும்பல்… பூனை, எலி விளையாட்டு காட்டும் கும்பலால் ஊழியர்கள் விரக்தி

Little India workers partying
Asia One

கடினமான வேலை பார்க்கும் ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு நாளோ இரண்டு நாளோ தங்கள் விடுதிகளில் ஓய்வு எடுக்கும் போது பக்கத்தில் இருந்து கூச்சல் சத்தம் வந்தால் நமக்கு எவ்வளவு தொல்லையாக இருக்கும்.

அதே போல ஒரு சம்பவம் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் நிகழ்த்து வருவதாக ஊழியர் ஒருவர் ஏசியா ஒன் தளத்திடம் தெரிவித்துள்ளார்.

ரேஸ் கோர்ஸ் சாலையில் வசிக்கும் ஒரு கும்பல், வார இறுதி நாட்களில் இரவு தாமதமாக ஒன்று கூடி போதையுடன் பெரும் சத்தத்துடன் அரட்டையடிப்பதாக அவர் கூறினார்.

“இந்த குடியிருப்பாளர்கள் பின்னர் ஜேடின் HDB பிளாட்டின் பின்புற சந்து பகுதியில் ஒன்றுகூடி, இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை அதிக சத்தம் எழுப்புவார்கள்.”

“அவர்கள் பொதுவாக நான்கு முதல் எட்டு பேர் கொண்ட குழுக்களாக இருப்பார்கள் மற்றும் குடிபோதையில் இருப்பது போல தோன்றும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அருகில் உள்ள பலருக்கு இவர்களால் கடுமையான தொல்லை ஏற்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இவர்களிடம் ஏன் வம்பு என்று புகார் அளிக்க யாரும் துணிவதில்லை என சொல்லப்பட்டுள்ளது.

அதே போல போலீஸ் ரோந்து கார் பிரதான சாலையில் நுழையும் போது இவர்களுக்கு சிக்னல் கொடுக்கப்படும், அதனை அடுத்து சுதாரித்து கொள்ளும் அந்த கூட்டம் பூனை, எலி விளையாட்டு காட்டுவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.