லிட்டில் இந்தியாவில் மது அருந்தத் தடை.. மீறினால் அபராதம், சிறை

Photo: Little India

லிட்டில் இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு பொது இடங்களில் மது அருந்த அனுமதி இல்லை என போலீசார் கூறியுள்ளனர்.

நாளை வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி முதல் வரும் அக்.25 ஆம் தேதி காலை 7 மணி வரை இந்த கட்டுப்பாடு நீடிக்கும்.

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்: பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரம்

அதாவது லிட்டில் இந்தியாவில் உள்ள பொது இடங்களில் மது அருந்த அக்காலகட்டத்தில் அனுமதி இல்லை என்றும் போலீசார் வலியுறுத்தி குறிப்பிட்டுள்ளனர்.

தடையை மீறி மது அருந்தினால் S$1,500 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அதை மீண்டும் செய்தால் 4.5 மாத சிறைத்தண்டனை மற்றும் S$3,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தீபாவளி கொண்டாட்டங்களின் போது சட்ட ஒழுங்கை பராமரிக்க லிட்டில் இந்தியாவில் காவல்துறை அதிகாரிகளின் ரோந்து பணி தீவீரப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 8 கார்களை அடித்து உடைத்த வெளிநாட்டு கட்டுமான ஊழியர் – ஏன் அவ்வாறு செய்தார்?