உயிருள்ள கோழி இறைச்சிக்கான ஏற்றுமதி தடையை நீக்குகிறது மலேசியா – கோழி பிரியர்கள் மகிழ்ச்சி

Live chicken broilers lifting export ban
Desmond Tan on Facebook

உயிருள்ள இறைச்சிக் கோழிகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மலேசியா நீக்கவுள்ளது.

இந்த கோழிக்கான தடை நாளை அக்டோபர் 11 ஆம் தேதி முதல் நீங்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்திவிட்டு வாயைப்பிளந்து தூங்கிய ஓட்டுநர் – தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ் (Video)

மலேசியாவின் கால்நடை சேவைகள் துறையிலிருந்து இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற்றதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) கூறியுள்ளது.

உயிருள்ள சிக்கன் பிராய்லர் இறக்குமதி மீண்டும் தொடங்குவதை வரவேற்கிறோம் என்றும், மேலும் விவரங்கள் குறித்து தகவல் வெளியிடப்படும் என்று SFA தெரிவித்துள்ளது.

பிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காகவே வளர்க்கப்படும் கோழி இனம் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் கடுமையாக மோதிய பேருந்து… சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் பலி