கடனை வாங்கிக்கொண்டு சொந்த நாட்டுக்கு ஓட்டம்… Work Permit, புகைப்படத்தை அனுப்பி மிரட்டும் கடனாளிகள் – உயிரிழந்த முதலாளி.. தொடரும் சோகம்

Loan shark harasses foreign maid flees Singapore
Shin Min Daily News

தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, தான் வாங்கிய கடனை அடைக்காத வெளிநாட்டு பணிப்பெண் ஒருவர் அவசர அவசரமாக சொந்த நாட்டுக்கு விமானத்தில் எஸ்கேப் ஆகியுள்ளார்.

அவர் பெற்ற கடனுக்காக அவரின் முதலாளி கடனாளர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிரேதம்.. போலீஸ் விசாரணை

தஞ்சோங் ரு பாவின் நிறுவனர் மறைந்த திரு லீ குவாங்குவாவை பார்த்துக்கொள்வதற்காக இந்தோனேசியாவை சேர்ந்த அந்த பணிப்பெண் பணியமர்த்தப்பட்டார்.

இரண்டு முறை கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட திரு லீயின் உடல்நிலை மோசமடைந்த காரணத்தால், கடந்த ஏப்ரல் 23 அன்று அவர் தனது 67 வயதில் மாரடைப்பால் இறந்தார்.

தனது தந்தையை இழந்து கவலையில் இருக்கும் அவரின் இரண்டாவது மகள், 32 வயதான லீ யிக்சியன் கூறியதாவது; தனது தந்தையின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு, அவரது குடும்பம் கடன் கொடுத்தோரின் துன்புறுத்தலையும் சமாளிக்க வேண்டியுள்ளது என்றும், இது தங்களை மேலும் துக்கப்படுத்துவதாகவும் கூறினார்.

9 மாதம் வேலை செய்த பணிப்பெண் தனது சம்பளத்தை முன்பணமாக கேட்டுக்கொண்டே இருப்பார் என்றும், ஒரு கட்டத்தில் தன்னுடைய தந்தை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக சொல்லி சொந்த நாட்டுக்கு பறந்துள்ளார்.

அவர் சென்ற அந்த நாளே, திருமதி லீயின் சகோதரருக்கு கடன் கொடுத்தோர் கடனை திருப்பி கேட்டு செய்தி அனுப்பியுள்ளனர். பணிப்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் அவரது work permit அனுமதியையும் கடன் கொடுத்தவர் செய்தி வழியாக பகிர்ந்துள்ளார்.

மேலும் பணிப்பெண் பெற்ற S$600 கடனைத் திருப்பிச் செலுத்துமாறு குடும்பத்தினரிடம் அவர் கேட்டார். அதோடு மட்டுமல்லாமல் இரண்டாவது தரப்பினரும் லீயின் குடும்பத்தை அணுகி, S$400 கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்டனர், அதாவது பணிப்பெண் மொத்தம் S$1,000 கடன் செலுத்த வேண்டும்.

திருமதி லீயின் கூற்றுப்படி, “கடன் கொடுத்தவர் தனது வீட்டு வாசலில் புகைப்படம் எடுத்ததுடன், சிவப்பு பெயிண்ட் மற்றும் பெட்ரோலை ஊற்றி மிரட்டும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளனர்.”

அவர் தந்தை மருத்துவமனையில் இருக்கும்போதும், பின்னர் இறந்த பிறகும் இந்த மிரட்டல் தொடர்ந்துள்ளதை வருத்தத்துடன் கூறினார்.

மேலும், இந்த கடனுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாவோம் என்றும் அவர்கள் கூற அதற்கு அவர் “நான் இதுவரை உங்களிடம் அமைதியான முறையில் பேசி வருகிறேன்” என்ற மிரட்டல் வார்த்தையையும் கூறியுள்ளார்.

பணிப்பெண்ணை தந்தை நல்ல முறையில் கவனித்து வைத்து இருந்ததாகவும், ஆனால் அவர் இவ்வாறு செய்வார் என்று நினைக்கவில்லை என்றும் அவர்கள் கவலையுடன் குறிப்பிட்டுள்ளனர்.

“ஊழியர்களுக்கு ரோபோ ஒருபோதும் மாற்றாகாது” – சிங்கப்பூர் இணையத்தில் வைரலாகும் வீடியோ