தமிழகத்தை சேர்த்த ஓட்டுனருக்கு லாரி ஓட்டத் தடை – S$1,000 அபராதம் விதிப்பு

(Photo: TODAY)

சரக்குகளை ஏற்றி இறக்கும் இடமான லோடிங் பேயில், ஓய்வு பெற்ற ஒருவர் மீது மோதி காயம் ஏற்படுத்திய லாரி ஓட்டுநருக்கு செவ்வாய்க்கிழமை (மே 10)
அன்று S$1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதில் 68 வயதான பாலகிருஷ்ணன் எஸ் சுப்பிரமணியம் என்ற அந்த ஊழியருக்கு, கனரக வாகனங்கள் உட்பட 4, 4A மற்றும் 5 பிரிவு வாகனங்கள் ஓட்ட 10 மாத தடையையும் விதிக்கப்பட்டுள்ளது.

கடையின் மேற்பரப்பு பலகை வழியாக விழுந்து உரிமையாளர் மரணம் – இந்த ஆண்டில் 20ஐ தொட்டது வேலையிட உயிரிழப்புகள்

கவனக்குறைவாக செயல்பட்டு மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்த குற்றச்சாட்டில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்.14, அன்று காலை 11.50 மணியளவில் வேலியண்ட் இண்டஸ்ட்ரியல் கட்டிடத்தின் சரக்குகளை ஏற்றி இறக்கும் இடத்தில் பாலகிருஷ்ணன் லாரியை ஓட்டிச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

தனது வாகனத்தை நிறுத்த இடம் காலியாக இல்லாததால், கன்டெய்னர் கனரக வாகனம் அருகே லாரியை அவர் நிறுத்தி வைத்துள்ளார்.

அப்போது 61 வயதான ஆடவர், லாரிக்கும் கன்டெய்னருக்கும் இடையே உள்ள இடத்தில் நடந்து கொண்டிருந்தார். அதே நேரத்தில், பாலகிருஷ்ணன் தனது லாரியை நிறுத்த இடம் கிடைத்ததால் லாரியை ஓட்டினார்.

அந்த நேரத்தில் ​​பாலகிருஷ்ணன் சரியாக கவனிக்காமல், அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு விலா எலும்பு முறிவு மற்றும் கல்லீரல் பாதிப்பும் ஏற்பட்டது.

சிங்கப்பூரில் மேலும் ஒரு கொடூர வேலையிட விபத்து.. இந்திய ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு