“என் வழி தனி வழி” லாரி ஓட்டுனரின் அலட்சியம்! – காணாமல்போன Benz காரின் கதவுகள்!

singapore-mercedes-driver-hospitalised-johor MOTHERSHIP.SG
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட Mercedes கார்மீது மோதிய 41 வயதான லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.Second link பாலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு எதிராக சாலையின் எதிர்புறத்தில் வாகனம் ஓட்டிய லாரி டிரைவர் இரண்டு கார்கள் மீது மோதி சேதப்படுத்தினார்.
சேதமான இரண்டு கார்களில் ஒன்று சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கருப்பு நிற Mercedes Benz E250 Sedan கார் ஆகும்.லாரி மோதிய மற்றொரு வாகனம் Nissan Almera என்று தெரிய வந்துள்ளது.மலேசியா நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி Second link விரைவுச்சாலையில் ஜனவரி 3, 2023 அன்று விபத்தை ஏற்படுத்தியது.
ஜோகூரில் உள்ள குலாயில் இருந்து தஞ்சோங் பெலபாஸ் துறைமுகத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் போக்குவரத்து வரிசைக்கு எதிர்திசையில் லாரியை இயக்கினார்.விரைவுச்சாலையின் வெளிப்புறத்தில் லாரியை ஓட்டிய போது , ​​அது மெர்சிடிஸ் மற்றும் நிசான் மீது மோதியது.

Benz காரின் முன் மற்றும் பின் கதவுகள் நொறுங்கியது.ஓட்டுனர் சாலையின் ஓரத்தில் விழுந்தார்.நிசான் டிரைவர் சிறு காயங்களுடன் ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விசாரணையில் லாரி டிரைவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது.போதையில் வாகனம் ஓட்டி காயங்களை ஏற்படுத்துபவர்களுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் மற்றும் RM50,000 (S$15,200) வரை அபராதம் விதிக்கப்படலாம்.