சரக்குகளை ஏற்றி சென்ற லாரி… ஓட்டுனருக்கு திடீரென பக்கவாதம்

Lorry driver suffers suspected stroke spore
Shin Min Daily News

ஜொகூர் மற்றும் சிங்கப்பூர் இடையே சரக்குகளை ஏற்றி சென்ற லாரி ஓட்டுனருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

​​58 வயதான மலேசிய லாரி ஓட்டுநர் கடந்த ஜூன் 26 அன்று சரக்குகளை ஏற்றிச் சென்றார். அப்போது அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது, மேலும் இருக்கையிலேயே அவர் மயக்க நிலையில் இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியரை மகனாக ஏற்றுக்கொண்ட சிங்கப்பூர் பெண்… ஊழியரின் அளவில்லா பாசத்துக்கு கிடைத்த வெற்றி

அதன் பின்னர் அவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் (NUH) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஜூ கூன் சர்க்கிளில் உள்ள Warehouse 37ஐ அடைந்தபோது அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு சுயநினைவை இழந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அன்று காலை 7:50 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

மலேசிய நிறுவனத்தில் பணிபுரிந்த அந்த ஊழியர், ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பொருட்களை தினமும் டெலிவரி செய்து வருவார் என்று கூறப்பட்டுள்ளது.

அவர் அதே நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக வேலை செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் புதிய வேலை அனுமதி விண்ணப்பங்கள் – செப்டம்பர் 1 முதல் இது கட்டாயம்