மூலையில் சுருண்டு கிடந்த செதில்கள் நிறைந்த வினோத உயிரினம்! -குடியிருப்பாளரின் ‘திக் திக்’ நொடிகள்!

lost-sunda-pangolin-sembawang-carpark pc- mothership
சிங்கப்பூரின் செம்பாவாங் பகுதியில் உள்ள அடுக்குமாடி கார் பார்க்கிங் படிக்கட்டுகளில் குடியிருப்பாளர் ஒருவர் சுந்தா பாங்கோலினைக் கண்டார்.சிங்கப்பூரின் காடுகளில் குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும் அரிய விலங்கினங்களில் இதுவும் ஒன்றாகும்.

செம்பவாங் குழு பிரதிநிதித்துவத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் வீ கியாக், நவம்பர் 6 அன்று முகநூலில் பகிர்ந்துள்ளார்.அதே நாளில் பிற்பகல் Blk 358A அட்மிரால்டி டிரைவில் உள்ள கார்பார்க்கில் பாங்கோலின் காணப்பட்டதாக லிம் கூறினார்.

செதில்கள் நிறைந்த சிறிய பாங்கோலின் ஒரு சிவப்பு நீர் குழாயின் பின்னால் மூலையில் சுருண்டு கிடந்திருக்கிறது.அதை மீட்பதற்காக Animal Concerns Research and Education Society (ACRES) அமைப்பிற்கு குடியிருப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
நவம்பர் 6 ஆம் தேதி மாலை 4:10 மணியளவில் உதவிக்கான அழைப்பு வந்ததாக (ACRES) தரப்பு தெரிவித்துள்ளது.சுந்தா பாங்கோலின்கள் சிங்கப்பூரில் வனப்பகுதியை ஒட்டிய நகர்ப்புறங்களில் அலைந்து திரிந்தாலும்,குடியிருப்புகளில் இது போன்ற நிகழ்வுகள் அரிதானவை.
புலாவ் உபின் மற்றும் புலாவ் டெகாங் தீவுகளிலும் காணப்படும் இந்த உயிரினங்கள் மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைக் காப்பகம் மற்றும் புக்கிட் திமா நேச்சர் ரிசர்வ், புக்கிட் பாடோக் மற்றும் மேற்கு நீர்ப்பிடிப்புப் பகுதி போன்ற வனப்பகுதிகளிலும் வசிக்கின்றன.மீட்கப்பட்ட பாங்கோலின் காயம் அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது பாங்கோலின் ஆரோக்கியமாக இருப்பதாகவும், இறுதியில் மீண்டும் காட்டுக்குள் விடப்படும் என்றும் என்றும் கூறப்படுகிறது.சிங்கப்பூரில் ஏதேனும் சட்டவிரோத வர்த்தகம் அல்லது வேட்டையாடுதல் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் NParks ஐ 1800 471 7300 என்ற எண்ணி ற்கு தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது காவல்துறைக்கு அழைக்க வேண்டும்.